வெளிநாட்டிலிருந்து விடுமுறைக்கு வந்த இளைஞர் ஒருவர் நண்பர்களுடன் விருந்திற்கு சென்ற நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் கைதடியில் இன்று (13) இந்த சம்பவம் நடந்தது.
பூநகரியை சேர்ந்த ரஜீவன் (31) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.
நண்பர்களுடன் சேர்ந்து கூழ், மது விருந்திற்காக நேற்றிரவு கைதடியிலுள்ள வீடொன்றிற்கு வந்துள்ளார். அங்கு நண்பர்கள் சேர்ந்து விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் நேற்றிரவு நண்பர்கள் அங்கேயே தங்கியுள்ளனர். அப்போது திடீரென ரஜீவன் வாந்தி எடுத்துள்ளார்.
அது சாதாரணமானதாக கருதியதால் அனைவரும் உறங்கி விட்டனர். இன்று காலையில் ரஜீவன் எழுந்திருக்காததையடுத்து, அவரை தட்டியெழுப்பியபோதே, அவர் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.