பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒரு பொறுப்பான நபராக ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் சேரன். ஒரு அப்பாவாக, நண்பராக, அண்ணனாக பலருக்கும் அவர் விளங்கினார்.
லாஸ்லியா விசயத்தில் அவருக்கு பல குடும்பங்களின் ஆதரவு பெருகியது. ஆனால் சேரன் இறுதி வரை செல்லாதது பலருக்கும் வருத்தமே. சேரன் தரமான, குடும்பப்பாங்கான கதைகளை படம் கொடுப்பவர்.
பிக்பாஸ்க்கு பிறகு அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அந்த வகையில் அவரின் அடுத்த படமான ராஜாவுக்கு செக் படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது.
தந்தை மகளுக்கான பாசத்தில் அளவீடு ஏது.. காலம்தான் சொல்லும் எது உண்மை எவ்வளவு உண்மையென்…
” ராஜாவுக்கு செக்” இன்று பாடல் வெளியீட்டு விழா..
கலந்துகொள்ள வருகைதரும் நண்பர்கள் அமீர், வசந்தபாலன், வெற்றிமாறன், ராம்,சரண் அனைவரையும் வரவேற்கிறேன். pic.twitter.com/KUU9mdLzxF— Cheran (@directorcheran) October 14, 2019