தர்ஷனுக்கு ஹீரோ விருதையும் கவினுக்கு மோசமான விருதையும் கொடுத்த ரியோ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட வி ஆர் தி பாய்ஸ் குழு பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தது.

இந்த நிகழ்ச்சி நேற்று மாலை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. சாண்டி, முகேன், தர்ஷன், கவின் ஆகியோருடன் ரியோ மற்றும் மா க பா ஆனந்த்தும் பங்கேற்றுள்ளனர்.

மிகவும் சுவாரஷ்யமாக சென்ற நிகழ்ச்சியின் முடிவில், ரியோ போட்டியாளர்கள் அனைவருக்கும் ஹாலிவுட் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களின் சில உருவ பொம்மைகளை பரிசாக அளித்திருந்தார்.


முகெனுக்கு ரெயின்போ ராக்கி பொம்மையையும் , தர்ஷனுக்கு கேப்டன் அமெரிக்கா உருவ பொம்மையும் ரியோ வழங்கியுள்ளார்.

ஆனால், அவெஞ்சர்ஸ் படத்தில் வரும் வில்லன் கதாபாத்திரமான லோகின் உருவ பொம்மையை கவினுக்கு கொடுத்துள்ளார். இது கவின் ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோருக்கும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தின் உருவ பொம்மைகளை அளித்த ரியோ கவினுக்கு மட்டும் வில்லன் கதாபாத்திரத்தின் உருவபொம்மையை அளித்திருந்தார். இருப்பினும் கவின் அதனை மிகவும் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார் .

எனினும், இந்த சர்ச்சைக்குரிய விருதை கொடுத்த ரியோவை ரசிகர்கள் அனைவரும் கடுமயாக திட்டி தீர்த்து வருகின்றனர்.