விஜய்யின் படங்கள் அண்மைகாலமாக பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. அதிலும் குறிப்பாக படம் ரிலீஸின் போது தான் கதை பிரச்சனை எழுந்து வருகிறது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் படம் வரும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. அக்டோபர் 25 ம் தேதி என முன்பே தகவல் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படத்தை கதை தன்னுடையது என செல்வா என்பவர் தொடர்ந்த வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் கீழமை நீதிமன்றத்தை தொடர்ந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.