தேவைப்படும் பொருட்கள் :
கேரட் – 1,
பழுத்த தக்காளி – 3,
பெரிய வெங்காயம் – 1/2 அளவு,
கொத்தமல்லித்தழை – சிறிது,
தண்ணீர் – 400 மி.லி.,
உப்பு, மிளகுத் தூள் – தே. அளவு
கிராம்பு – 2,
பூண்டு – 2 பல்
பட்டை – 1/2 இன்ச் அளவு.
செய்யும் முறை :-
தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
குக்கரில் நறுக்கிய தக்காளி, வெங்காயம், கேரட், பூண்டு, பட்டை, கிராம்பு, மிளகுத் தூள், தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 2 விசில் விட்டு தக்காளியை வேக விடவும்.
சூடு ஆறியதும் நன்கு மசித்து வடித்துக் கொள்ளவும்.
குறைவான சூட்டில் 300 மி.லி. வரும் வரை சூப்பைச் சூடு செய்து, உப்பு சேர்த்து கலந்து, கடைசியாக நறுக்கிய கொத்தமல்லியால் அலங்கரித்து பரிமாறவும்.