முதல் மனைவி வைத்த ஆப்பு..3 வது மனைவி கதறல்.! அப்படி என்ன நடந்தது ??

தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மதுரை கூடல்நகரைச் சேர்ந்த கவிதா (வயது 35) என்பவர் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில், “கடந்த 2008-ல் கே.புதூர் அழகர்நகரைச் சேர்ந்த செந்தில்குமார் (43) என்பவருடன் எனக்கு திருமணம் நடைபெற்றது.

25 பவுன் நகைகள் மற்றும் சீர்வரிசைப் பொருட்கள் எங்கள் திருமணத்திற்கு சீதனமாக வழங்கப்பட்டது. எங்கள் எங்களுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். எனது கணவர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் பிரிந்து வாழ்ந்து வருகின்றேன். 2013-ல் விதுபாலா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்தார்.

ஆனால், இருவரும்  சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இந்நிலையில், செந்தில்குமார் போலி விவாகரத்து உத்தரவு ஒன்றை தயார் செய்து அதனை காட்டி மீனாட்சி (32) என்ற பெண்ணை 3-வது திருமணம் செய்து இருக்கின்றனர்.

இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரின் பேரில் செந்தில்குமார் மற்றும் மீனாட்சி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், அவரது உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.