பிரட் பக்கோடா செய்வது எப்படி.?

தேவைப்படும் பொருட்கள் :-

பிரெட் ஸ்லைஸ் – 6
வெங்காயம் – 2
இஞ்சித் துருவல் – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
அரிசி மாவு –  4 ஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு –  4 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
முந்திரிப்பருப்பு – 10
வேர்க்கடலை – ஒரு கைப்பிடி
எண்ணெய், உப்பு – தேவையான அளவு

செய்யும் முறை :-

வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். பிரெட்டைப் பொடித்து, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, வெங்காயம் சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து கெட்டியாகப் பிசையவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தீயை மிதமாக வைத்து, பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, காயும் எண்ணெயில் கிள்ளிப்போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.