தெலங்கானா முதலமைச்சர் வீட்டில் நடந்த தற்கொலை.!

தெலங்கானா மாநிலம் சித்திபேட் மாவட்டத்தில் உள்ள எர்ரவல்லி பகுதியில் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பண்ணை வீடு அமைந்துள்ளது. இதில் வெங்கடேஷ்வரலு என்ற தலைமை காவலர் பணியில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில், இன்று காவல் பணியில் ஈடுபட்டிருந்த வெங்கடேஷ்வரலு, தான் வைத்திருந்த துப்பாக்கியால் திடீரென தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

இதனைத்தொடர்ந்து, பணியில் இருந்த மற்றொரு போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட வெங்கடேஷ்வரலுவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். வெங்கடேஷ்வரலுவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காவலர் வெங்கடேஷ்வரலு மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் என்றும், குடியை நிறுத்துவதற்கான சிகிச்சை மேற்கொள்ள கடந்த ஒரு மாத காலமாக விடுமுறையில் இருந்த அவர் தற்போதுதான் பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளன.