யாருக்கு தமிழ் தெரியாது? தமிழ் என் தாய்மொழி….. ரசிகரிடம் கோபம் கொண்ட மிதாலி ராஜ்!

தமிழ் என் தாய்மொழி, தமிழனாய் வாழ்வது பெருமை என இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்!

தமிழ் என் தாய்மொழி, தமிழனாய் வாழ்வது பெருமை என இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் தெரிவித்துள்ளார்!

மிதாலி ராஜ்-க்கு தமிழ் தெரியாது, இதுவரை ஒருமுறை கூட அவர் தமிழில் நேர்காணல் அளித்ததில்லை என ட்விட்டர் பயனர் விமர்சித்த நிலையில், மிதாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தமிழில் இவ்வாறு பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

முன்னதாக வதோதராவில் நடைப்பெற்ற தென்னாப்பிரிக்கா பெண்களுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மிதாலி ராஜ் பல சாதனைகளை படைத்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் நிறைவு, ஒருநாள் ரன்-சேஸில் 3000 ரன்களை முடித்த வீராங்கனை, தனது தலைமையில் 100 போட்டிகளை வென்று கொடுத்த வீராங்கனை என அடுத்தடுத்து சாதனைகளை படைத்தார் மிதாலி.

மிதாலின் வளர்ச்சியை பாராட்டி கிரிக்கெட் ஜாம்பவான் என கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார். சச்சினின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மிதாலி ராஜ் ஆங்கிலத்தில் பதிவு ஒன்றினை இட்டிருந்தார். இந்தி பதிவிற்கு கீழாக மிதாலி ராஜின் மொழி புலமை குறித்து பயனர்கள் சிலர் விவாதம் நடத்தினர்.

பயனர்களின் விவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தானும் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ள மிதாலி ராஜ் குறிப்பிடுகையில்.,

“தமிழ் என் தாய் மொழி..
நான் தமிழ் நன்றாக பேசுவேன்..
தமிழனாய் வாழ்வது எனக்கு பெருமை..
இது அனைத்திற்கும் மேலாக நான் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறேன். அன்பிற்குறிய sugu(மிதாலியை விமர்சித்த ட்விட்டர் பயனர்), என்னுடைய செயல்பாடுகளை நீங்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. உங்களது விமர்சனங்கள் தான் என்னை மேன்மேலும் வளர்கிறது.” என குறிப்பிட்டுள்ளார். மிதாலி ராஜின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.