தேவையான பொருட்கள்:
அரைத்த மிளகு – 1 டீஸ்பூன்
பூண்டுப் பல் – 3
சுக்குப் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
தக்காளி – 1
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 2
நெய் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவைக்கு.
செய்முறை:
வாணலியில் நெய்விட்டுச் சூடான பின்னர் அரிந்த வெங்காயம் மற்றும் நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கவும்.
அதன் பின்னர் அதில், தக்காளி, மிளகுப் பொடி, மஞ்சள் தூள், சுக்குப் பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு உள்ளிட்டவற்றை போட்டு நன்றாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
இதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.
சூப்பானது நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவிற்கு குறைந்த பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு சூப்பை மூடிவிடுங்கள். அதன் பின்னர் மிதமான சூட்டில் வடிகட்டிப் பருகினால் அருமையான மிளகு சூப் ரெடி.!