ஜெயலலிதா இறப்புக்கு இவர்கள் தான் காரணம்…!!!

தமிழகத்தில் விக்கிரவாண்டு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் அதிமுக கட்சியின் சார்பாக முத்தமிழ் செல்வன் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய முதல்வர்.. நாங்குநேரி பிரச்சாரத்தில் திமுக கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் பேசும் போது, இந்த ஆட்சியில் நாங்கள் செய்தது குறித்து நாங்கள் பொய் பேசுவதாக கூறியிருந்தார்.

ஆனால், எங்களது ஆட்சியில் என்ன என்ன செய்தோம் என்பதை பட்டியலிட்டு உண்மையாகவும், நேர்மையாகவும் மக்களுக்கு தெரிவித்து வருகிறோம். நாங்கள் புள்ளி விவரத்தோடு தான் பேசுகிறோம் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து, நீட் தேர்வுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது அதிமுக அரசுதான் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், ஜெயலலிதா மரணமடைந்தது குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்று அவர் தொடர்ந்து பேசி வருகிறார். ஆனால் ஜெயலலிதா மரணமடைந்ததற்கு கருணாநிதியும், மு.க.ஸ்டாலினும் தான் காரணம்.

திமுகவினர் ஜெயலலிதா மீது பொய் வழக்கு போட்டதால் தான் அவர் சிறைக்கு சென்றார். அதில் விடுதலையாகி வெளியே வந்த நிலையில், அதை பொறுக்க முடியாமல், ஜெயலலிதாவை பழிவாங்கவும், அதிமுகவை அழிக்க வேண்டும் என்று நினைத்தும் திமுகவினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்கள்.

இவ்வாறு அவருக்கு மன உளைச்சல் கொடுத்ததாலும், சிறைக்கு சென்றதாலும் தான் உரிய முறையில் ஜெயலலிதாவால் சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியவில்லை.

எனவே அவரது இறப்பு பற்றி பேச ஸ்டாலினுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று கூறினார்.