நடிகை த்ரிஷாவுக்கு பெரிய கம்பேக் கொடுத்த படம் 96. இந்த படத்தில் விஜய் சேதுபதி-த்ரிஷா ஆகியோரின் கெமிஸ்ட்ரி பெரிய அளவில் பேசப்பட்டது.
பள்ளி காதலர்கள் பிரிந்து வெவ்வேறு திசையில் சென்று பல வருடங்கள் கழித்து ஒரு கெட்டூகெதர் பார்ட்டியில் சந்திப்பதை மிக ஜனரஞ்சகமாக காட்டி ரசிகர்கள் வெகுவாக கவர்ந்தது 96.
இந்த படத்தின் வாய்ப்பு முதலில் மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு தான் தரவிருந்தாராம் இயக்குனர் பிரேம் குமார். ஆனால் மஞ்சு வாரியரை பலமுறை தொடர்புகொண்டும் சந்தித்து பேச முடியவில்லை. அதன்பிறகு தான் த்ரிஷாவை தேடி சென்றுள்ளார் இயக்குனர்.
தற்போது அசுரன் படத்தில் நடித்துள்ள மஞ்சு வாரியர் இந்த தகவலை சோகமாக ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். என்னை அவர் அணுகியிருந்தால் நிச்சயம் நான் 96ல் நடித்திருப்பேன் என கூறியுள்ளார்.