தமிழ் சினிமாவில் டாப் இயக்குனர்கள் இயக்கும் பல படங்கள் கதை திருட்டு சர்ச்சைகளில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. தற்போது அட்லீ இயக்கியுள்ள பிகில் படமும் இந்த சர்ச்சையில் தொடர்ந்து சிக்கி வருகிறது.
தமிழ்நாட்டில் துணை இயக்குனர் கேபி செல்வா என்பவர் பிகில் கதை என்னுடையது என கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் பிகில் தெலுங்கு ட்ரைலர் வெளியானது. அதை பார்த்துவிட்டு குறும்பட இயக்குனர் ஒருவர் கதை திருட்டு புகார் அளித்துள்ளார்.
Slum Soccer என்ற குறும்படத்தை இயக்கிய நந்தி சின்னி ரெட்டி என்ற இயக்குனர் விசில் படத்தின் கதை தன் குறும்படத்தில் இருந்து தான் எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
Telangana Cinema Writers’ Associationல் அவர் புகார் அளித்துள்ளார். வழக்கு தொடர வேண்டும் என்றும் சின்னி ரெட்டி கேட்டுள்ளார்.