சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் நம்ம வீட்டுப்பிள்ளை படம் வெளியானது. அவர் தற்போது மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.
டிசம்பர் இறுதியில் வெளியாகவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. அண்மையில் பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் மகன் நடிகர் அகில் சிவகார்த்திகேயனை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.
பின் இருவரும் நீண்ட நேரம் கலந்துரையாடினார்கள். இதன் புகைப்படத்தை அண்மையில் அகில் வெளியிட்டார்.
சிவகார்த்திகேயன் தயாரித்த கனா படம் தெலுங்கில் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் சிவா கேமியோ ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.