முன்னணி குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்..!!!

தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் அதிகம் பிரபலமானவர் குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா. இவர் பிரபல தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணா போல டிவி நிகழ்ச்சிகளில் நடித்து அதிகம் கைதட்டல் வாங்குபவர்.

இவர் நேற்று திடீர் மரணமடைந்துள்ளார் என செய்தி வெளியானது ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா துறையினருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சித்தூரின் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த அவர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மேல் சிகிச்சைக்காக அவரை பெங்களூருக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே கோகுல் சாய் கிருஷ்ணாவின் உயிர் பிரிந்துள்ளது.

இவரது திடீர் இறப்புக்கு முன்னணி சினிமா பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.