பாரிசின் ஓர்லி விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்று, பயணி ஒருவர் கதவை திறக்க முற்பட்டதால் உடனடியாக திருப்பப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் ஓர்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, TO3010 எனும் விமானம் Marrakech நகர விமான நிலையம் நோக்கி புறப்பட்டது.
நேற்று காலை 6.15 மணிக்கு இந்த விமானம் புறப்பட்டபோது, பயணி ஒருவர் திடீரென கதவை திறக்க முற்பட்டுள்ளார். அவசரகால வெளியேற்ற கதவை அவர் திறக்க முயன்றதால், சக பயணிகள் பதற்றத்திற்கு உள்ளாகினர்.
உடனே விமானத்தில் இருந்த உதவியாளர்களால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து விமானம் சில நிமிடங்களிலேயே ஓர்லி விமான நிலையத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டு, தரையிறக்கப்பட்டது.
இந்நிலையில், கதவை திறக்க முயன்ற குறித்த பயணியின் மீது விமான சேவை நிறுவனம் வழக்கு தொடுத்துள்ளது.