வித்தியாசமான தோற்றத்திற்கு மாறிய பிரபல நடிகை!

மலையாள சினிமாவை சேர்ந்தவர் நடிகை நஸ்ரியா. நேரம், ராஜா ராணி, வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா என தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.

இருந்த போதிலும் அவருக்கும் பெரும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. நடிகர் ஃபஹத் ஃபாசிலுடன் அவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார்.

இருவரும் இணைந்து தற்போது படத்தில் நடித்து வரும் நிலையில் அவர் தற்போது புதிய ஹேர் ஸ்டைலுக்கு மாறி வலிமை என டேக் போட்டுள்ளார். அஜித்தின் வலிமை பட டைட்டில் டிரெண்டிங்கில் இருக்கும் இந்த நேரத்தில் படத்தை பற்றி நஸ்ரியா எதுவும் குறிப்பிடாமல் இப்படி தன்னுடைய புகைப்படத்தை போட்டு வலிமை என டேக் செய்தது எதற்கு என புரியாமல் ரசிகர்கள் குழபத்தில் இருக்கிறார்கள்.