காரசாரமான., ஆந்திரா ஸ்பைஸி சிக்கன்.!

ஆந்திராவில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஸ்பைஸி சிக்கன் ஒன்றாகும். இப்போது இந்த ஸ்பைஸி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள் :

சிக்கன் – ஒரு கிலோ
வெங்காயம் – 5
இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 4 டீஸ்பூன்
தனியாத்தூள் – 4 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – 3 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – சிறிதளவு
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தண்ணீர் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் சிக்கனைக் கழுவி சுத்தம் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சிக்கனைப் போட்டு வதக்க வேண்டும். சிக்கன் நன்கு வதங்கியதும், அதில் மஞ்சள்தூள், இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

பிறகு சிக்கன் பாதி வெந்ததும், அதனுடன் மிளகாய்த்தூள் மற்றும் சிறிதளவு உப்பு போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறி மூடி வைக்க வேண்டும். அதன் பின்பு அரைத்து வைத்திருக்கும் வெங்காய விழுதைப் போட்டு நன்கு கிளறி விடவும்.

கடைசியாக சிக்கன் நன்கு வெந்ததும் அதில் கரம் மசாலாத்தூள், தனியாத்தூள் போட்டு சிறிது நேரம் மூடிவைத்து அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லித்தழையைத் தூவி இறக்கினால், ஆந்திரா ஸ்பைஸி சிக்கன் தயார்..!