தங்கத்தின் விலையில் மாற்றம்.!

கடந்த மூன்று வாரங்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்து வந்த நிலையில் மீண்டும் தங்கம் விலை உயர்த் தொடங்கியுள்ளது.

அதன்படி, இன்று சவரனுக்கு 16 ரூபாய் குறைந்து, 22 கேரட் தங்கத்தின் ஒரு கிராம் விலையானது ரூ.3666 ஆகவும், ஒரு சவரன் தங்கத்தின் விலையானது ரூ.29328 ஆகவும் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் 24 கேரட் அளவிலான தங்கத்திற்கு ஒரு கிராம் ரூ.3831 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.30648 விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 49.20 காசுகளாகவும், கிலோ வெள்ளி ரூ.49,200 ஆகவும் இன்று விற்பனை செய்யப்பட்டது.

கடந்த மூன்று மாதமாக வரலாறு காணாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்துள்ளது. இதற்க்காக நான்கு காரணங்கள் உள்ளது என தங்க வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா – சீனா இடையே நடைபெற்று வரும் பொருளாதார வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் மீது முதலீடு அதிகமாகி விட்டது.