சூதாட்டத்தில் சிக்கிய கிரிக்கெட் வீரருக்கு 5 ஆண்டு சிறை.!

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் வீரரான குலாம் போடி(வயது 46)  இவர் இந்தியாவில் பிறந்தவர் ஆவர் .

இரண்டு ஒருநாள் மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ள இவர் மீது மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு எழுந்தது.

2015 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின்போது அவர் மேட்ச் பிக்சிங் புகாரில் சிக்கினார். இதற்காக குலாம் போடிக்கு கிரிக்கெட் விளையாட 20 வருடம் தடை விதித்தது தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம்.

இந்தநிலையில், குலாம்போடி மீதான சூதாட்ட வழக்கு பிரிட்டோரியாவில் உள்ள குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அவர் மீது 8 விதமான ஊழல் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் குலாம்போடிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யவுள்ளார்.