இயற்கை வளங்களைப் பார்த்தாலே மனிதர்கள் எல்லாவற்றையும் மறந்து மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கூறலாம்.
ஒரு சில இடங்கள் கண்ணைப் பறிக்கும் வகையில் வித்தியாசமாகவும், அதிசயமாகவும், ஆச்சரியமாகவும் நமக்கு தோற்றமளிக்கும்.
அதுபோல கடலில் இருக்கும் இயற்கை காட்சிகள் ஏராளம் என்று கூறலாம். பொதுவாக கடலில் இருக்கும் நீர் நீல வண்ணத்தில்தான் இருக்கும் என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.
ஆனால், இந்த கடல் பார்பதற்கு சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதை உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். இன்று நாம் அந்த அதிசயமான கடலைப் பற்றி பார்க்கலாம்.
எங்கே இருக்கிறது இந்த சிவப்பு கடல்?
சீனாவில் பஞ்சின் என்ற இடத்தில் இயற்கையை ஈர்க்கக்கூடிய மற்றும் புகழ் வாய்ந்த இடமாக திகழ்கிறது இந்த சிவப்பு கடல்.
இந்த ஆழமற்ற கடல் ஒரு சிவப்பு புல் பேரினம் ஆகும். இவை ஆழமற்றதாகவும், அலையுள்ள நிலப்பகுதிகளாகவும் தோற்றங்களை ஏற்படுத்துகின்றன.
இது ஒரு பெரிய நிலங்களிலும், கோரைப்புல்களான (பாசி) தண்ணீரோடு கலந்த சதுப்பு நிலப்பகுதியாகும்.
இதன் அதிசயம் என்னவென்றால் கடலில் உள்ள நீர் சிவப்பாக இருப்பதில்லை. அதன் மீது இருக்கும் இந்தக் கோரைபுற்கள் பச்சை நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாறி நாம் பார்ப்பதற்கு ஒரு சிவப்புக் கடலாக காட்சியளிக்கிறது.
சிவப்பு கடல் எல்லா கடல்களை போலவே காட்சியளிக்கும். ஆனால் குறிப்பிட்ட மாதத்தில் பச்சையாக இருக்கும் கோரைப் புற்கள், சில மாதங்களுக்கு பிறகு அடர் சிவப்பு வண்ணமாக மாறி உலகின் அழகிய கடற்கரையாகவும் நமக்கு காட்சியளிக்கும்.
பிறகு அடர் சிவப்பிலிருந்து, இளஞ்சிவப்பு நிறமாக மாறி காய்ந்து விடுகின்றன. சில மாதங்களில் அந்த கோரைப்புல் மீண்டும் முளைக்கிறது.
ஏன் இந்தக் கடல் சிவப்பாக இருக்கிறது?
அதற்கு காரணம் இயற்கையாகவே கோரைப்புல் சிவப்பாக மாறிவிடும் மற்றும் அந்தக் கடலில் உள்ள உப்பு, காரத்தன்மையின் காரணமாக சிவப்பு நிறத்தை தருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தனித்துவம் வாய்ந்த இந்த அழகிய கடற்கரையை மிக கவனமாக பாதுகாத்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள பாலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.