பெண்ணை நாடக காதலால் சீரழித்து கொடூர கொலை செய்த நாடக காதலன்.!!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர் மாவட்டத்தில் இருக்கும் லட்சுமிபுரா கிராமத்தை சார்ந்தவர் பவன் (வயது 19). இவர் அங்குள்ள பள்ளியில் பயின்று வந்த நிலையில்., இவருடன் அதே பகுதியை சார்ந்த நாகம்மா (வயது 18) என்ற பெண்மணியும் பயின்று வந்துள்ளார்.

பள்ளிப்பருவ பழக்கத்தை வைத்து நாகம்மாவை காதலித்து வந்த நிலையில்., நாகம்மாவிடம் காதலை தெரிவித்துள்ளான். முதலில் ஏற்க மறுத்த பெண்ணை., நாடக காதலால் வீழ்த்தி மயக்கியுள்ளான்.

இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில்., நாகம்மாவிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். மேலும்., இவர்களின் காதல் வாழ்க்கையானது ஒரு சமயத்திற்கு மேல் பெற்றோர்களுக்கு தெரியவந்துள்ளது.

இந்த விபரத்தை அறிந்த பெற்றோர்கள் இருவருக்கும் கடந்த 16 ஆம் தேதியன்று திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில்., இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத பவன்., நாகம்மாவின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நான் காரணம் இல்லை என்று தெரிவித்தார்.

இதனால் கடுமையான விரக்தியில் இருந்த பவன் தனது மனைவியை மறுநாளே இரும்பு கம்பியை வைத்து அடித்து கொலை செய்துள்ளார். இது குறித்து தற்போது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பவனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.