ஈருடல் ஓருயிர் என்று வாழும் ஆதர்சன தம்பதியரின் எண்ணிக்கை சமீப காலமாக குறைந்துவருகிறது. இதற்கு முக்கிய காரணம் தாம்பத்தி யத்தில் உண்டாகும் விரிசலே என்கிறாரள் உளவியலாளர்கள்.
பெற்றோர்கள் முடித்து வைத்த திருமணமாக இருந்தாலும், காதல் மணம் புரிந்த தம்பதியராய் இருந்தாலும் மணமொத்த தம்பதியராய் வாழ்க்கை முழுக்க வாழவே கணவன் மனைவி இருவரும் விரும்புவார்கள். கண்ணும் கண்ணும் கலந்து காதல் புரிந்து ஊடலோடு திருமணம் செய்து கொண்ட தம்பதியர் கூட பிரிவை அதிகம் சந் தித்து வருவது வேதனை அளிக்கிறது. சமீப காலங்களாக விவாகரத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதே தம்பதிய ரின் அன்னியோன்யம் குறைந்து வருவதற்கு எடுத்துக்காட்டாக சொல்லலாம்.
பொருளாதார பிரச்சனை, குடும்பத்தில் சிறு சச்சரவுகள், குழந்தை வளர்ப்பு, உடல் ஆரோக்கிய குறைபாடு இவையெல் லாம் தம்பதியருக்குள் எவ்வித பிளவையும் பெரிதாக உண்டாக்குவதில்லை. ஆனால் மனதையும் உடலையும் மகிழ்ச்சி யாக்கும் தாம்பத்தியத்தில் நேரும் குறைபாடே இருவருக்குள் இருக்கும் அன்னியோன்யத்தைக் குறைத்து விரிசலை அதிக மாக்கிவிடுகிறது.
மகிழ்ச்சியான தாம்பத்தியத்தைத் தவிர்க்காமல் இருவருக்குள் நெருக்கம் அதிகமாக தம்பதியர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று தெரியுமா?
உறவை பலப்படுத்திக்கொள்ளுங்கள்
ஆயுளுக்குக்கும் பலப்பட வேண்டிய உறவு என்றால் அது கணவன் மனைவி உறவுதான். கூட்டுக்குடும்பங்களில் தனிமை யில் மட்டுமே கிடைக்கப்பட்ட தாம்பத்தியம் இன்று தனிக்குடும்பங்களில் போதிய இடவசதி, ப்ரைவஸி, நேரம் எல்லாம் இருந்தும் தாம்பத்தியத்தில் பிரச்சனை என்பது கேள்விக்குறியதாகவே இருக்கிறது.
குடும்பத்தின் கட்டமைப்பு என்பது கணவன் மனைவி உறவு பலத்தில் தான் என்பதை இருவருமே புரிந்து கொள்ளுங்கள். திருமணமான புதிதில் இருந்த தாம்பத்திய மகிழ்ச்சி வாழ்வு முழுமைக்கும் தொடர தாம்பத்தியத்தில் இடைவெளியை அதிகப்படுத்தாதீர்கள். அதிமுழுமையான புரிதலுடன் கூடிய தாம்பத்தியம் உங்கள் வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சியை அளிக்கும் என்பதை இருவருமே உணருங்கள்.
குழந்தையைக் காரணம் காட்டாதீர்கள்
கணவன் மனைவி இருவருக்குமான உறவில் குழந்தையின் வரவு மகிழ்ச்சிக்குரியதாக இருக்க வேண்டும். கணவன் விருப் பத்தோடு அழைக்கும் போது குழந்தையைக் காரணம் காட்டி விலகி செல்லாதீர்கள். குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பு இருவருக்குமே உண்டு என்று வாக்குவாதமும் செய்யாதீர்கள்.
குழந்தையின் உறக்கத்துக்குப் பிறகு என்று உங்களவரை சமாதானம் செய்து குழந்தைப் பராமரிப்பை அவரிடமும் ஒப்ப டையுங்கள். உங்கள் விருப்பத்தைப் புரிந்து கொண்டு அவரும் குழந்தை வளர்ப்பில் மகிழ்ச்சியாக ஈடுபடுவார்.
பணிச்சுமைக்கு தோள் கொடுங்கள்
இருவருமே வேலைக்கு செல்லும் சூழலில் உங்கள் மனைவி களைப்பில் வரும்போது சில நேரங்களில் உடலுறவு கொள்வதில் விருப்பமில்லாமல் இருப்பார். மீறி அவரை வற்புறுத்தும் போது உங்களின் வெறுப்புக்கு உள்ளாக நேருமோ என்ற அச் சத்தில் அடிபணிவார். இது இனிமையான தாம்பத்தை அளிக்காது. நாளடைவில் தாம்பத்தியத்தின் மீது அதிகப்படியான வெறுப்பையே அவருக்கு உண்டாக்கிவிடும்.
அத்தகைய தருணங்களில் மனைவியை வற்புறுத்தாமல் கணவன் ஆதரவாக இருப்பது மற்றொரு வகை அன்பான தாம்பத் தியத்தைக் காட்டும். அடுத்துவரும் நாட்களில் மனைவியின் அன்பில் இதை உணரலாம்.
அன்பை எப்போதும் வெளிப்படுத்துங்கள்
பெரும்பாலும் உடலுறவு தேவையை வெளிப்படுத்துவது கணவன் தான். மனைவியின் தேவையை உணர்ந்து செயல்படும் கணவனுக்கு தாம்பத்தியமும் இனிக்க கிடைக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். கரிசனமான அன்பு, பரிவான வார்த்தை இவைதான் பெரும்பான்மையான மனைவியின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
என்னுடைய தேவையை கவனிக்கும் ஒரே பெண் நீ மட்டும்தான் என்னும் கணவனின் வெளிப்படையான அன்பும் பேச்சும் மனைவியின் அன்பை மொத்தமாக பெறச்செய்கிறது. உறவுகள் முன்னிலையிலும் பொதுப்படையான அன்பை வெளிப்ப டுத்த இருவருமே தயங்க வேண்டாம்.
விருப்பு வெருப்பு வேண்டாம்
தனிப்பட்ட முறையில் இருவருக்கும் இருக்கும் ஆசைகளைத் தங்களுக்காக மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேண்டாம். இருவரது உறவினர்களைப் பற்றியோ குடும்ப உறுப்பினர்கள் குறித்தோ குறைகளை அடுக்காமல் அவரவர்க ளது இயல்பு அப்படிதான் என்னும் மனநிலைக்கு கணவன் மனைவி இருவருமே வருவது பல சமயங்களில் பல பிரச்சனைக ளைக் கட்டுப்படுத்தும்.
இந்தத் தருணங்களில் இறுதி வரை ஒன்றாக இணைந்து வாழ்வது இருவர் மட்டும்தான் என்னும் மனநிலையை வலுவாக்குங் கள். குறைகளை சுட்டிகாட்டி பேசுவதும் மனதில் வெறுப்பை உண்டாக்கும். முக்கியமாக பிரச்சனைகளைப் பெரிதாக்கா மல் இருவரும் பொறுமையாக பேசி முடிவு செய்ய வேண்டும் என்பதை ஒரு கொள்கையாக வைத்திருங்கள். ஒருவருக்காக ஒருவர் மாற்றி கொள்வதை விட இருவரும் இணைந்து ரசிப்பது பல நேரங்களில் இல்லற வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கும்.
தனிமையில் கோபம்
தவறு செய்தவர் யாராக இருந்தாலும் தனிமையில் வெளிப்படுத்துங்கள். இருவரது பொதுவான எதிர்பார்ப்பும் இதுதான். குழந்தைகள், பெரியவர்கள் முன்னிலையில் இருவருக்குள்ளும் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது உங்கள் தாம்பத்திய வாழ்க் கையில் பிரச்சனையை உண்டாக்காது.
ஒருவர் மீது மற்றொருவர் கோபமாக இருந்தாலும் தவறு செய்தவர் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றில்லாமல் ஈகோ பார்க்காமல் பேசிவிடுங்கள். ஊடலில் கூடல் என்பது இருவருக்குமே அன்பின் ஆழத்தைப் புரிய வைக்கும்.
எப்போதும் பளிச் புன்னகை
புன்னகை எல்லாவற்றுக்குமே அருமருந்து. உங்கள் துணையிடம் எப்போதும் எரிந்துவிழாமல் ஒருவருக்கொருவர் பேசும் போதெல்லாம் புன்னகையான முகத்துடன் எதிர்கொள்ளுங்கள். டென்ஷனையும் பிரச்சனைகளையும் சச்சரவுகளையும் சந்திக்காமல் யாருமே இல்லை.
வாழ்வில் சந்திக்கும் இவற்றைக் கையாள அருமையான தோழமை போதும். அது உங்களவராக இருந்தால் எத்தனை சவால் களையும் சாமார்த்தியமாக கடந்துவிடலாம். அதனால் புன்னகையோடு முடிந்தால் எப்போதும் ஒரு ஐ லவ் யூ வோடு பேசுங் கள். நாள் முழுக்க இருவருமே மனதில் பட்டாம்பூச்சி பறக்க வலம் வருவீர்கள்.
ஆழமான முத்தம்
உடலுறவு மட்டுமே தாம்பத்தியம் என்று நினைக்காமல் உங்கள் துணை உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் போதெல் லாம் ஒரு முத்தத்தைக் கொடுத்துவிடுங்கள். எதிர்பாராத நேரத்தில் கிடைக்கும் இந்த அன்பான ஊடல் பரிசு உங்கள் துணையின் சோர்வை விரட்டியடிக்கும். உங்கள் மீதான கோவத்தையும் பொடியாக்கிவிடும். நேரம் காலம் இல்லாமல் கொடுக்கும் இந்தப் பரிசு நீங்கள் தேடி தேடி வாங்கும் விலை மதிப்புள்ள பரிசை விட சிறந்த பரிசு.
உறவிலும் புதுமை
தாம்பத்தியம் மகிழ்ச்சியாக இருக்கும் பட்சத்தில் அடுத்த நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக வேலை பார்க்க உதவும். இதை ஆய்வுகளும் உறுதிபடுத்தியிருக்கின்றன. ஒரே மாதிரியாக உறவு கொள்ளாமல் உறவு புரிவதிலும் அவ்வபோது மாற்றங்களைச் செய்யுங்கள். இது உடலுறவில் ஈர்ப்பை அதிகரிக்கும்.
புதுமையான முறையில் உறவில் ஈடுபடுவதோடு உங்கள் துணையின் விருப்பமும் முக்கியம். அன்பை வெளிப்படுத்திக் கொள்வதில் இருக்கும் மகிழ்ச்சியைப் போல் தாம்பத்தியத்தில் விருப்பத்தைத் தெரிவிக்கும் போதும் இரட்டிப்பாகவே இருக் கும். மேலும் தாம்பத்தியத்தில் நெருக்கம் அதீத அன்பை இருவருக்குள் உண்டாக்கும்.
உறவுக்கு பிறகு
உறவுக்கு பிறகான நேரங்களில் இருவருமே அன்றாடம் இருவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எப்படி செய்யலாம் என்று ஆலோசனை செய்யுங்கள். அது குழந்தைகள் கல்வி முதல் குடும்ப பொருளாதாரம் வரையும் இருக்கலாம். உங்கள் தாம்பத்தியம், ஊடல், கோபம், வருத்தம் எதுவாகவும் இருக்கலாம்.
உறவுக்கு பின் உங்கள் துணையின் மீது இருக்கும் தவறை சுட்டிக்காட்டினாலும் அத்தருணத்தில் அவர்கள் வாதம் செய்யா மல் அதைப் புரிந்து கொள்வார்கள். கணவன், மனைவி இருவருக்குமே இது பொருந்தும்.
மேற்கண்ட பத்து குறிப்புகளையும் கடைப்பிடித்தால் அன்பில் மட்டுமல்ல தாம்பத்திய வாழ்க்கையிலும் அன்னியோன்யம் அதிகரிக்கும். ஆயுள் முழுமைக்கும் ஆதர்சன தம்பதியராய் வாழலாம்.