கடந்த 2013 ஆம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நஸ்ரியா. இதைதொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார்.
பின்பு, நடிகர் பஹத் பசிலை திருமணம் செய்துகொண்டு தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி இருந்த இவர் மீண்டும் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து மலையாளத்தில் முன்னனி நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் நிலையில் அவர் தற்போது புதிய ஹேர் ஸ்டைலுடன் ஒரு போட்டோ ஒன்றை தனது டுவிட்டர் பகத்தில் பதிவிட்டுள்ளார். அழகான தனது தலை முடியை வெட்டி புதிய தோற்றத்தில் உள்ளார்.
மேலும் அந்த பதிவில் வலிமை என்று ஹேஸ்டேக் போட்டுள்ளார். அஜித்தின் வலிமை பட துவக்க நாளில் இவர் இவ்வாறு பதிவிட்டுள்ளது அந்த படத்தில் இவர் நடிக்கிறாரா என்ற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.