வயோதிப பெண்னொருவர் கழுத்து அறுத்து கொலை.!! யாழில் நடந்த கொடூரம்..!!

தனிமையில் இருந்த வயோதிப பெண்னொருவர் கழுத்து அறுத்து கொலைசெய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோண்டாவில் நெட்டிலிப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் அப் பகுதியைச் சேர்ந்த புன்னியகாந்தன் சந்திராதேவி (61) என்ற வயோதிப பெண்னொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் இந்த வயோதிப பெண் தனிமையில் வசித்து வந்துள்ள நிலையில் இன்று காலை கொலைசெய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தக்கொலை சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.