தும்மலை அடக்கக் கூடாது என்று கூறுவதற்கான காரணம் இது தான்..

தும்மல் என்பது நம் உடலுக்குள் உட்புக முயலும் தொற்றுக் களுக்கு எதிரான இயற்கையின் தற்பாது காப்பாகும்.

தும்மலை அடக்க கூடாது. காற்றைத் தவிர வேறு எந்த ஒரு வெளிப்பொருளும் மூக்கில் நுழைந்தால், மூக்கு அதை ஏற்காது. உடனே ஒரு எதிர்வினையை உருவாக்கும். அந்த எதிர்வினைதான் தும்மல். இது அனிச்சையாக நடக்கும். நாம் தும்மும் போது நம் உடலுக்குள் நுழைய முயலும் பாக்டீரியா அல்லது ஏதேனும் தீமையான துகள்கள், மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் வெளியேற்றப்படும்.

இந்த வழியில், ஆபத்தான தொற்றுக்கள் நம்மை அண்டாமல் தும்மல் நம்மை பாதுகாக்கும். பொது இடத்தில் தும்மும் போது, தும்முபவர் மற்றும் அவரை சுற்றியுள்ளவர்களு க்கும் அசௌகரியம் ஏற்படலாம்.

அதனால் நாம் தும்மும் போது, நம் அருகில் உள்ளவர் களிடம் “எக்ஸ்க்யூஸ் மீ” என கூறுவது வழக்கம். இருப்பினும், நாம் தும்மும் போது அருகில் உள்ளவர்கள் “கடவுள் உங்களை ஆசீர்வதிக் கட்டும்” அல்லது “நீண்ட ஆயுளை பெறுங்கள்” என நம்மை ஏன் வாழ்த்துகிறார்கள் என எப்போதாவது யோசித்துள்ளீர்களா?

அதற்கு காரணம், தும்மலை தடுக்க முயற்சி செய்தால், அது நம் உயிருக்கே ஆபாத்தாய் போய் முடியலாம். ஆம், இது உண்மை தான்.

தும்மலை ஒரு போதும் தடுக்க முயற்சி செய்யாதீர்கள். அது உங்கள் உடல் உறுப்பு களுக்கு பாதிப்பை உண்டாக்கி விடலாம்.

தும்மலால் எழும் காற்று அழுத்தம் காதுகள், மூளை, கழுத்து போன்ற ஏதேனும் உறுப்பிடம் திசை திரும்பி விடலாம். இதனால் அவைகளுக்கு பாதிப்பு உண்டாகும்.

தும்மலை நிறுத்த முயற்சி செய்வதால் ஏற்படும் ஆபத்தான உடல்நல தாக்கங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

தும்மல் வரும் போது மூக்கின் துளைகள் வழியாக மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் காற்று உள்ளேயும், வெளியேயும் செல்லும்.

நீங்கள் தும்மலை நிறுத்தினால், இந்த காற்று அழுத்தம் முழுவதும் காதுகள் போன்ற உடலின் வேறு ஒரு அங்கத்திற்கு திசை திருப்பப்படும்.

ஒரு வேளை காதுகள் என்றால், செவிப்பறை களில் வெடிப்பு ஏற்பட்டு, காது கேட்காமலும் போகலாம். தும்மலை நிறுத்துவதால் உடல் நலத்தின் மீந்தும் கூட தீமையான தாக்கங்கள் ஏற்படலாம்.

தும்முவதால் நம் உடலுக்குள் நுழைய முயலும் தீமையான பாக்டீரியாக்கள் பலவற்றை வெளியேற்றும். தும்மலை நிறுத்துவதால், இத்தகைய ஆபத்தான கிருமிகள் நம் உடலிலேயே தங்கி, நோய்களை உண்டாக்கும்.

தும்மலை நிறுத்தினால் காற்றின் அழுத்தம் உள்ளே அடைபட்டு விடும். அதிகரித்த காற்று அழுத்தத்தினால், உங்கள் கண்களின் இரத்த தந்துகிகள் பாதிப்படைவ தால் கண்கள் பாதிப்படை யலாம் மற்றும் காதுகள் கேட்காமலும் போகலாம். கழுத்து காயங்கள் மற்றும் இடைத் தடுப்பில் பாதிப்பு போன்றவை களும் உண்டாகலாம். சில அரிய நேரங்களில், மூளையில் உள்ள நரம்புகளில் ஏற்படும் முறிவுகளால் வாதமும் ஏற்படலாம்