கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குநர் P.வாசு இயக்கத்தில் நடிகர் பிரபு நடித்து வெளியான படம் கிழக்கு கரை. இப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிஃபெர்.
இதைத்தொடர்ந்து பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
பின்பு, கடந்த 2004 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமடைந்தார் ஜெனிஃபெர்.
இதைத்தொடர்ந்து, சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, சட்டென்று சீரியல் பக்கம் தவினார். தாயுமானவன், கேளடி கண்மனி, வள்ளி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது.