உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளிருந்து கடந்த 6 மாதங்களாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஓய்வு இல்லாமல் விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலியா தொடர், ஐபிஎல்,மே மாதம் நடைபெற்ற உலகக்கோப்பை, வெஸ்ட் இண்டீஸ், தற்போது நடைபெற்று வரும் தென்ஆப்பிரிக்கா தொடர் என சிறிதும் ஓய்வில்லாமல் விராட் கோலி விளையாடி வருகிறார்.
இதனால், வேலைப்பளுவை காரணம் காட்டி அடுத்து வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டியில் விராட் கோலி விளையாடமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
வங்காளதேச தொடருக்கான இந்திய அணி வீரர்களின் தேர்வு வருகின்ற 24 ஆம் தேதி நடக்கவுள்ளது. அப்போது விராட் கோலி ஓய்வு பெற்றால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிறது.