இன்றுள்ள காலநிலையில் காய்ச்சல்கள் அதிகளவில் பரவிக்கொண்டு வருகிறது. இதனை முடிந்தளவு நாமே கவனித்தால்., பெரும் பிரச்சனையில் இருந்து நாம் தப்பிக்க இயலும்.
காய்ச்சல் 100 டிகிரியை தாண்டும் போது, சுத்தமான காட்டன் துணியை குளிர்ந்த தண்ணீரில் நனைத்துப் பிழிந்து, நெற்றி பகுதிகளில் வைத்துத் துடைத்தாலே 80 சதவிகிதம் குணமடையும்.
மருந்துகள் என்பவை ஒருவரது வயது, ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து வேறுபடும்.
காய்ச்சலுடன் கூடிய தொண்டைக் கரகரப்பு, மூக்கடைப்பு போன்றவற்றுக்குத் தாமாகவே மருந்துக்கடைகளை அணுகி, ஆன்டிபயாடிக் வாங்கி சாப்பிடக் கூடாது.
ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் போது, அதை பாதியிலே நிறுத்தவும் கூடாது. முழுவதும் குணமாகும் வரை, பரிந்துரைக்கப்பட்ட மொத்த ஆன்டிபயாடிக்கையும் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.