நடிகர் ரஜினி கூறியது போல என் வழி தனி வழி என சினிமாவில் தனக்கென தனி பாதை வகுத்து பயணிப்பவர் நடிகர் அஜித். எந்த ஒரு பட நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்துகொள்வதுதில்லை.
அவ்வளவாக வெளியே கூட செல்லமாட்டார் படம் நடிப்பது எனது வேலை பிடித்தால் பாருங்க இல்லையெனில் விடுங்கள் என்று தான் தனது ரசிகர்களிடம் சொல்வார்.
மேலும் எனது ரசிகராக இருந்தால் உங்களது குடும்பத்தை முதலில் கவனியுங்கள் என பல முறை கூறியிருப்பர்.
தனது திரைப்பயணத்தில் வித்தியாசம் காட்ட விரும்பிய அஜித், இயக்குனர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் நடிக்க முதலில் கமிட்டானார், ஆனால் சில விஷயங்களால்அந்த படத்தில் ஆர்யா நடித்தார்.
இந்தநிலையில், தற்போது நான் கடவுள் படத்திற்காக நடிகர் அஜித் நடித்த அகோரியாக கெட்டப் போட்ட புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.