லாஸ்லியா இலங்கை பெண்ணான இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானார். நிகழ்ச்சி தொடங்கிய நேரத்தில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.
இப்போது அவ்வளவு ரசிகர்கள் தான், நிகழ்ச்சி முடித்ததில் இருந்து இலங்கை செல்லாமல் தமிழ்நாட்டில் மற்ற பிரபலங்களுடன் கொண்டாட்டத்தில் இருந்தார்.
தற்போது தனது சொந்த தாய் நாடான இலங்கைக்கு லாஸ்லியா செல்ல ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்துள்ளனர். அங்கு விமான நிலையத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், பிக்பாஸ் நிகழ்ச்சி என்னைப் போன்ற சாதாரண பெண்ணுக்கும் புகழ் வெளிச்சத்தைத் தந்துள்ளது.
நிகழ்ச்சிக்கு முன் பெரிய அளவில் யாருக்கும் தெரியாது, தற்போது பெரும் புகழை அடைந்திருக்கிறேன்.
இதற்காக பிக்பாஸ் குழுவுக்கு நன்றி, எனக்கு மிகப்பெரிய கடமையும் இருப்பதை உணர்ந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.