மட்டன் துண்டுகள் மற்றும் எலும்பு துண்டுகளை சேர்த்து குழம்பு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு புண்டு, இஞ்சி மற்றும் சீரகம் சோக்கும்போது நல்ல ஜீரண தன்மையை கொடுப்பதுடன் சுவையும் அதிகரிக்கும்.
பொதுவாக ஒரு 100 கிராம் மட்டன் துண்டுகளை எடுத்து தனியாக சுப் செய்வது மிகவும் சுலபம். இந்த சுப்பை காலை, மதியம் இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.
உப்புப் போட்ட நீரில் முட்டைகளை 15 நிமிடங்கள் வேக வைத்தெடுத்து குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்துவிட்டு பிறகு சமைக்கலாம். குளிர்ந்த நீரில் போட்டு வைப்பதால் முட்டையை தோலுரிக்க சுலபமாக இருக்கும்.
சிக்கன் பொரிக்கும் முன்பே கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கனிலும் அந்த வாசம் நன்றாக இருக்கும்.
வாரம் ஒரு முறை மீனை உட்கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்கலாம்.
மீன் குழம்பிற்கு பொதுவாக செதில் மற்றும் நடுமுள் உள்ள கடல் மீன் சுவையாக இருக்கும். முக்கியமாக மீன் குழம்பு செய்யும்போது அதிக நேரம் கொதிக்க வைத்தால் மீன் குழம்பின் சுவை குறைந்து விடும்.
இறைச்சிக்கு பதிலாக கடல் உணவுகளில் ஒன்றான இறாலை சமைத்து சாப்பிட்டால் உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டையின் மஞ்சள் கருவினை நீக்கி வெறும் வெள்ளை கருவினை வைத்தும் குழம்பு செய்யலாம்.