வாரம் ஒருமுறை ராகியை சாப்பிட்டு வந்தால், உடல் ஆரோக்கியமாக இருக்கும். அத்தகைய ராகியை பலவாறு சமைத்து சாப்பிடலாம். அந்த வகையில் ராகியைக் கொண்டு ராகி தோசை, ராகி புட்டு, ராகி உப்புமா, ராகி பூரி போன்றவை செய்யலாம். இப்போது இந்த ருசியான ராகி பூரி எளிதாக எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
ராகி மாவு – 2 கப்
கோதுமை மாவு – 2 கப்
உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்தது)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை :
முதலில் ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு ஒன்றை எடுத்து நன்றாக மசித்து தேவையான அளவு உப்பு, 3 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலந்து, ராகி மாவு, கோதுமை மாவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
பின்பு பூரி மாவை சிறு உருண்டைகளாக்கி, பூரி போன்று தேய்த்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள பூரிகளை ஒவ்வொன்றாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், ருசியான ராகி பூரி தயார்..!