தேவைப்படும் பொருட்கள் :
கோதுமை பிரெட் – ஒன்று
சீஸ் துருவல் – 1 கப்
புரோகோலி – ஒரு கப்
காலிபிளவர் – ஒரு கப்
தக்காளி – ஒரு கப்
கேரட் – ஒரு கப்
குடமிளகாய் – ஒரு கப்
மக்காச்சோளம் – ஒரு கப்
அன்னாசி – ஒரு கப்
திராட்சை – ஒரு கப்
ஆப்பிள் – ஒரு கப்
ஆரஞ்சு – ஒரு கப்
செய்யும் முறை :
காய்கறிகளை அரை வேக்காடாக வேகவைத்துக் கொள்ளுங்கள். நான்ஸ்டிக் தவா மீது பிரெட் துண்டுகளை வைத்துச் சிறு தீயில் முறுவலாக ரஸ்க் பிஸ்கட்போல் வாட்டிக்கொள்ளுங்கள். பிரெட் மீது பீட்சா சாஸைத் தடவி அரை வேக்காடு வேகவைத்த காய்களைப் பரப்புங்கள்.
அதன் மீது வெங்காயத் தாளைப் பரப்பி துருவிய சீஸ், சில்லி ப்ளேக்ஸ் இரண்டையும் தூவுங்கள். சில நிமிடங்கள் அப்படியே மூடிவைத்து எடுத்துப் பரிமாறுங்கள். இந்த பிரெட் பீட்சாவை அதிக நேரம் தீயில் வைத்தால் தீய்ந்துவிடும். இதே போல் காய்களுக்குப் பதிலாகப் பழத்துண்டுகளை வைத்து சீஸ் துருவல் சேர்த்து ஒரு நிமிடம் மூடிவைத்தால் பழ பீட்சா தயார்.