குழந்தையை, நீ இப்படி தான் இருக்க வேண்டும், இந்த மாதிரி தான் நடந்து கொள்ள வேண்டும் என உங்கள் விருப்பத்தை அவர்களிடம் திணிக்க கூடாது, “நீ நீயாய் இரு” என்று அதன் போக்கில் வளர விடவும்.
பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளிடம், “இன்று நாள் எப்படி?” என்று கேட்டு அவர்களது படிப்பு மற்றும் நட்பு வட்டாரம் குறித்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு குழந்தையும், கொடுக்கும் எல்லா உணவையும் குப்பையில் கொட்டாது. எனவே உணவு உண்பது குறித்து அறிவுரை கூறாமல், அன்பாக எடுத்துரையுங்கள்.
நீ பாட்டு கற்றுக்கொள், நடனம் கற்றுக்கொள், ஓவியம் வரை என்று உங்கள் கருத்தை வலியுறுத்தாமல், குழந்தைகளிடம், “உனக்கு என்ன செய்ய பிடிக்கும்?” என்று கேட்டு தெரிந்து, அதன் விருப்பத்தை நிறைவேற்றுங்கள்.
நடைமுறை வாழ்வில், உங்கள் குழந்தை தோல்வியைக் கண்டு பயமோ அல்லது சோர்வோ அடைந்தால், குழந்தைக்கு தைரியமூட்டி, கை விடாதே! முயற்சி செய்! என்று நம்பிக்கை கொடுங்கள்.