பச்சை பயறு தேங்காய் பாயசம் செய்வது எப்படி.?.!

தேவைப்படும் பொருட்கள் :-

பச்சைப் பயறு – 1 கிண்ணம்
துருவிய வெல்லம் – ஒன்றரை கிண்ணம்
மெலிதாக நறுக்கிய தேங்காய் – 3  ஸ்பூன்
ஏலப்பொடி – 1 ஸ்பூன்
நெய் – 2  ஸ்பூன்
உடைத்த முந்திரி – 2 ஸ்பூன்

செய்யும் முறை :

வெறும் வாணலியில் பச்சைப் பயறை வறுத்து, தண்ணீர் ஊற்றி வேகவிடுங்கள். பயறு நெத்துப் பதமாக வெந்ததும் வெல்லத் துருவலைச் சேர்த்து இரண்டு கொதி விடுங்கள்.

வாணலியில் நெய்யை ஊற்றித் தேங்காய்க் கீற்றுகளையும் முந்திரித் துண்டுகளையும் போட்டு வறுத்துப் பாயசத்தில் சேர்த்து, ஏலப்பொடியைத் தூவி இறக்குங்கள்.