தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வரும் இயக்குனர் அட்லீயின் அனைத்து படங்களையும் எடிட் செய்தவர் ரூபன் தான். தற்போது பிகில் படத்தையும் அவர் தான் எடிட் செய்துள்ளார்.
தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில் எடிட்டிங் செய்யும்போது நடந்த சில விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். “எடிட்டிங் டேபிளில் ஒரு படத்தின் கதை, திரைக்கதையை மாற்றலாம்.. அது அடிக்கடி நடக்கும். பிகில் படத்திற்கும் அப்படி நடந்தது” என கூறியுள்ளார் அவர்.
மேலும் அட்லீயுடன் அடிக்கடி வாக்குவாதம் நடக்கும் என கூறிய அவரிடம் என்ன வாக்குவாதம்? என கேட்டதற்கு ‘இந்த சீன் படத்தில் இருக்க வேண்டுமா வேண்டாமா?’ என்பது பற்றித்தான். எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்தாலும் படத்திற்கு எது நல்லதோ அந்த முடிவை சமரசமாக எடுப்போம் என பதிலளித்தார் அவர்.