விக்னேஷ் சிவன் மீது செம கோபத்தில் தனுஷ் ரசிகர்கள்!

நடிகர் தனுஷ் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை திட்டி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் போடா போடி என்ற தோல்வி படத்தை இயக்கிய பிறகு, அவரை நம்பி அடுத்து நானும் ரௌடி தான் படத்தை தயாரித்தார் நடிகர் தனுஷ்.

அந்த படம் வந்து நான்கு வருடங்கள் முடிந்ததை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் விக்னேஷ் சிவன் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதி, நயன்தாரா துவங்கி படத்தை வாங்கி வெளியிட்ட லைகா நிறுவனம் வரை அனைவருக்கும் நன்றி கூறிவிட்டார். ஆனால் படத்தை தயாரித்த தனுஷ் பெயரை கூட எங்கும் குறிப்பிடவில்லை.

இதனால் கோபமான தனுஷ் ரசிகர்கள், நன்றி மறைந்தவர் விக்னேஷ் சிவன் என ட்விட்டரில் திட்ட வருகின்றனர்.