விஜய் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. பிகில் ரிலீஸ் சமயத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை

நடிகர் விஜய் படம் வெளிவருகிறது என்றால் பல சர்ச்சைகளை தொடர்ந்து வரிசைகட்டி நிற்கும். இதை நாம் விஜய்யின் முந்தைய பல படங்கள் ரிலீஸ் சமயத்தில் பார்த்திருக்கிறோம்.

தற்போது பிகில் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் தற்போது விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவில் பூ கடையில் வேலை செய்பவர்களை இழிவு படுத்தும் வகையில் பேசிவிட்டார் என கூறி பூக்கடை தொழிலாளர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விஜய் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுள்ளனர்.

விஜய் பிகில் இசை வெளியீட்டு விழாவில் சொன்ன குட்டி கதையில், பூக்கடையில் வேலை செய்பவனை பட்டாசு கடையில் வேலைக்கு சேர்த்தால் அவன் பட்டாசில் தண்ணீர் தெளித்து வியாபாரத்தை கெடுத்துவிடுவான் என கூறினார்.

ஏற்கனவே பிகில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வந்தபோது கறிக்கடை கட்டையில் கால்வைத்து விட்டார் என கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.