இந்தியாவின் தலைநகரான டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தேசிய புலனாய்வு அமைப்பினர் சார்பாக பயங்கரவாதத்துக்கு எதிரான உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில் கர்நாடக மாநிலம்., ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாவட்டங்களில் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையம்., இரயில் நிலையம் மற்றும் விமான நிலையம்., பிற இடங்களில் பலத்த பாதுகாப்பு கண்காணிப்பு மேற்கொள்ளுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து மூன்று மாநிலங்களிலும் காவல்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் பாதுகாப்பையும் பலப்படுத்தி உள்ள நிலையில்., கர்நாடக மாநிலத்தில் உள்ள காவல்துறை மந்திரி பசவராஜ் பொம்மை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பயங்கரவாதிகளை கண்டறிந்து அவர்களின் செயலை தடுப்பதற்கு தனிப்படைகளை அமைத்து அனைத்து பேருந்து நிலையம்., ரயில் நிலையம் மற்றும் விமான நிலையத்தில் பாதுகாப்பை பலப்படுத்திய நிலையில்., கர்நாடக மாநிலத்தில் ஜம்மு-காஷ்மீர் பயங்கரவாதிகள் மற்றும் வங்காளதேசம் நாட்டினைச் சார்ந்த பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாகவும்., இவர்களுக்கு பெங்களூர் மற்றும் மைசூர் பகுதிகளில் ஸ்லீப்பர் செல்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரியவந்தது.
தற்போது பண்டிகை காலமான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில்., இதனை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் மற்றும் ராணுவம் சார்பாக பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு நிலையில்., பொதுமக்கள் அதிகம் கூடும் இடம் சுற்றுலாத்தலங்கள் ஆகியவற்றிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தார்வார் மாவட்டத்தில் இருக்கும் உப்பள்ளி நகர்., மராட்டிய மாநிலத்தின் எல்லையில் அமைந்துள்ள நிலையில்., இந்த நகரில் உள்ள ரயில் நிலையத்தின் ஒன்றாவது நடைமேடையில்., ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா மற்றும் உப்பபள்ளி இடையேயான அமராவதி எக்ஸ்பிரஸ் இரயில் பயணத்தை முடித்துவிட்டு நின்றுகொண்டு இருந்தது.
இந்த இரயிலை சுத்தம் செய்யும் பணிக்காக அங்குள்ள பணியாளர்கள் ஈடுபட்டிருந்த சமயத்தில்., சந்தேகத்திற்கிடமான சுமார் 10 டிபன் பாக்ஸ் ஒரு பெட்டியில் இருந்த நிலையில்., இதனை பார்த்த இரயில்வே அதிகாரிகள் இந்த பெட்டியை எடுத்துக்கொண்டு நடைமேடைக்கு வந்த நிலையில்., உப்பள்ளி இரயில்வே கேன்டீனில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இந்த டிபன் பாக்சை திறந்து பார்த்ததுள்ளார்.
இந்த சமயத்தில்., இவர் திறந்த டிபன் பாக்ஸ் வெடித்துச்சிதறிய நிலையில்., அவரின் கைகள் படுகாயமடைந்த நிலையில்., இவருடன் இருந்த இரண்டு பேரும் படுகாயமடைந்தனர். இதுமட்டுமல்லாது இரயில் நிலைய அதிகாரியின் அறையில் இருக்கும் ஜன்னல் போன்றவை எளிதில் உடைந்து சிதறியது. இந்த சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பயணிகள்., வெடி செயலிழப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில்., மீதமுள்ள டிபன் பாக்ஸ்களை சோதனை செய்ததில்., அதிலும் வெடிகுண்டு இருந்தது. இதனை பாதுகாப்பாக செயலிழக்கக செய்த நிலையில்., இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.