உலகக்கோப்பை போட்டிக்கு பின்னர் மீண்டும் ட்ரெஸிங் ரூமில் தோனி.!

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது கடந்த 19 ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் முடிந்தது.

3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரினை 3 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தொடரை கைபற்றயது. இந்த போட்டியை காண சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேரில் வந்து பார்த்தார்.

மூன்றவது  டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சி தான் தோனியின் சொந்த ஊராகும். அவரை கவுரவப்படுத்தும் விதமாக இந்த போட்டியின் தொடக்க நாளான நாளை அவரது குடும்பத்தினருக்கும் அவருடைய நண்பர்களுக்கும் குழந்தை, பள்ளி கால பயிற்சியாளர்களுக்கும் ஜார்கண்ட் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்தது, இந்த அழைப்பை ஏற்று தோனியும் அவருடைய நண்பரும் மற்றும் அவருடைய குடும்பத்தினரும் டெஸ்ட் போட்டியை நேரில் கண்டுகளித்தனர்.

போட்டி நடைபெற்ற போது ட்ரெஸிங் ரூம் சென்ற தோனி இந்தியா அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் வீரர்களுடனும் ட்ரெஸிங் ரூம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.

டெஸ்ட் போட்டிகளில் ஒய்வு பெற்ற பிறகு தோனி டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் மைதானங்களில் ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நாளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.