கவினுக்கு அடித்த ஜாக்பாட்..!!

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் வீ ஆர் த பாய்ஸ் என்று கலகலப்பாக இருந்து வந்தவர்கள் சாண்டி, முகேன், கவின், தர்ஷன். இவர்களை யாரலும் மறக்கமுடியாது. அதில் ஒருவரான முகேன் தான் பிக்பாஸ் பட்டத்தை வென்றார்.

முகேன் தனது வெற்றிக்கு பிறகு மலேசியாவிற்கு சென்று விட்டார். ஆனால் கவின், தர்ஷன், சாண்டி ஆகிய மூவரும் ஜாலியாக சுற்றி வருகின்றனர். பேட்டி, நிகழ்ச்சி என எங்கு சென்றாலும் ஒன்றாக தான் சென்று வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் தர்ஷன் மற்றும் சாண்டி கலந்து கொண்டனர். அப்போது சாண்டியிடம் கவின் எங்கே என கேட்டுள்ளனர். அதற்கு அவர் படப்பிடிப்புக்காக கவின் வெளிநாடு சென்றுள்ளார் என கூறியுள்ளார். உடனே கவின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.