ஜோதிடத்தில் அழகை நிர்ணயிக்கும் அதிபதி யார்? சாதாரணமாக உடலாதிபதி என்பவர் சந்திரன். அவர் தான் தோற்ற அமைப்பிற்கு உரிய கிரகம்.
இந்த சந்திரன் ஒருவரின் முகத் தோற்றம், முகப்பொலிவு, அந்த உருண்டை முகம், அந்த முகத்திற்கு தகுந்த மாதிரி மூக்கு, கண், காது எல்லாம் செதுக்கி வைப்பது என்று ஜோதிடம் சொல்கிறது.
உதாரணத்திற்கு ஒருவரின் ஜாதகத்தில் சுக்ரன் நன்றாக இருக்கிறது என்றால், ஒருவிதமான காந்தமான அல்லது கணிவான கண்கள். அவர்களிடம் இருக்கும்.
அத்தகையவர்கள் ஒருவரை பார்த்து கண் சிமிட்டினாலே போதும் அவர்கள் அசந்து போய்விடுவார்கள் அவ்வளவு அழகாக தோற்றமளிப்பார்கள்.
சாமுத்திரிகா லட்சணத்தில் மூக்கு தான் பிரதானம். கண்கள், நெற்றி அமைப்பு. நெற்றியில் இருக்கும் கோடுகளையெல்லாம் வைத்து சில விடயங்களை கூறலாம்.
சனி லக்னம் ராசியை பார்க்கிறதென்றால் நெற்றியில் கோடுகள் வர ஆரம்பித்துவிடும். அடுத்து புதன் ஒருவருக்கு வலுவாக இருந்தால் மெல்லிய விரல்கள் நீளமான விரல்கள் இருக்கும். அவருடைய கையைப் பார்க்கும் போதே சொல்லி விடலாம், அவர்களின் ஜாதகத்தில் புதன் உச்சமாக இருக்கிறார்.
மேஷ லக்னம் என்றால் அதிகமான உயரமாக இருக்க மாட்டார்கள். சராசரி உயரம், பருத்த தேகம் அல்ல. ஒல்லியாகவும் இல்லாமல் உயரத்திற்கு ஏற்ற சதைப்பிடிப்புடன் இருப்பார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் என்றால் சராசரி உயரம், அதற்கும் மேலாக இருப்பார்கள்.
மிதுனம், கன்னி இதெல்லாம் புதன் ராசி. இவர்களுக்கு மூக்கின் நுனி கொஞ்சம் உருண்டையாக இருக்கும்.
துலாம், சிம்மம், மகரம் ஆகிய ராசிக்கார்களுக்கு மூக்கு நீளமாக இருக்கும்.
தனுசு, மீனம் ராசிக்காரர்களுக்கு ஒரு மாதிரி மடிந்து, அதாவது பெருமாள் மூக்கு போன்று இருக்கும்.