முன் ஜென்மக் காதல் இந்த ஜென்மத்திலும் தொடருமா..?

நீங்கள் ஒருவரை முதன் முறையாக சந்தித்தபோது நன்கு பழகியவர்கள் போன்ற உணர்வை பெறுகிறீர்களா? ஆனால் எங்கு சந்தித்தோம் என்கிற நியாபகம் இருக்கவில்லையா? இதுபோன்ற நினைவுகள் இருந்தால் நிச்சயம் நீங்கள் அவரைச் சந்தித்தது என்பது உண்மைதான்.
ஆனால் இந்தக் காலத்தில் இல்லை. கடந்த காலத்தில் அவரை நீங்கள் சந்தித்திருப்பீர்கள். மேலும் அவர்கள் செய்யும் நிகழ்வுகள் முன்பும் நிகழ்ந்ததை போல் உணர்கிறீர்கள் என்றால் அது சாதரணமான விசயமல்ல.

மீண்டும் ஒரு வாய்ப்பு கடந்த காலத்தில் ஒருவரை ஒருவர் நன்கு காதலித்திருக்கலாம். ஆனால் இறுதியில் சேராமல் போயிருக்கலாம். அதற்காகவே இந்த வாய்ப்பு கொடுக்கப்பட்டதாக எண்ணிக் கொள்ளுங்கள். இந்த வாய்ப்பையாவது சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்கள் காதலை புதுப்பியுங்கள் கடந்த காலங்களில் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடு இருந்திருக்கலாம். அதற்காக என்ன பண்ண முடியும். உங்களுக்கு கடவுளால் மறுவாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தி எப்படி இந்தச் ஜென்மத்திலாவது உங்கள் காதல் போக வாழ்க்கையை கொண்டாடுங்கள்.

எப்படி கண்டுபிடிப்பது முன் ஜென்மக் காதலர் தான் இந்தக் காலத்திலும் உங்களுக்கு காதலராக வந்திருக்கிறார் என்றால் அதை எப்படி கண்டுபிடிப்பது என்பது தானே உங்கள் கேள்வியாக இருந்திருக்கிறது. இந்த 7 அறிகுறிகள் இருந்தால் அது உண்மைதான் என்று உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் பார்த்தவுடன் பற்றிக் கொள்ளும் என்பதற்கேற்ப பலவருடங்கள் பழகிய உணர்வை உங்களுக்கு தரும். இதை நீங்கள் வார்த்தைகளால் ஒரு போதும் கொட்டித் தீர்த்துவிடமுடியாது. உங்கள் உணர்வுகளால் கட்டப்பட்ட இந்தக் காதலை தூசித் தட்டி எடுத்தாற் போல் மகிழ்வைத் தரும். கடந்த கால காதலர்களின் உறவு வேரைப் போல் அவர்களின் மனதில் நன்கு ஊன்றியிருக்கிறது. மேலும் இதுபோன்ற உணர்வு ஒரு நாள் முதல் ஓரிரு வாரங்கள் வரை இருக்கலாம்.

அடுத்தகட்ட நகர்வை ஊகிக்க முடியும் கடந்தகால காதலர்கள் ஒருவர் பேசும் போது அதை எப்படி முடித்து வைப்பார் என்று மற்றொருவர் கூறுவார். இதிலிருந்தே தெரிய வேண்டாமா இவர்களின் காதலின் ஆழம். இவர் இதைத் தான் பேசுவார். இப்படித் தான் நடந்துக் கொள்வார் என முன்பின் அறிமுகமில்லாதவரை ஊகித்துச் சொல்ல முடியுமா. முடியாது. நேரம் மற்றும் காலம் கடந்து காதலித்தல் இருவரும் சந்திக்கும் தருணங்களில் மட்டும் நீங்கள் ஒன்றிணைந்து இருப்பதாக நினைக்க மாட்டீர்கள். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் உங்கள் இணையரின் சிந்தனையை உள்வாங்கும் திறன் இயல்பாகவே உங்களிடம் இருந்திருக்கும். இந்தக் காதல் இணையர்கள் ஒரு போதும் தனிமையை உணர மாட்டார்கள். ஏனெனில் அவ்வளவு நினைவுகளை அவர்கள் சுமந்துக் கொண்டிருக்கிறார்கள்.

இணையருடன் இருப்பதே சொர்க்கம் இணையருடன் நீங்கள் இருக்கும் தருணமே சொந்த வீட்டில் இருக்கும் தருணத்தை உணர்வீர்கள். அதாவது சொர்க்கத்தி இருப்பதாக உணர்வீர்கள். அது தெருவாக இருக்கலாம், குப்பைத் தொட்டிக்கு அருகிலுள்ள பூங்கா மேஜையாக இருக்கலாம். ஆனால் இணையருடன் இருப்பதை சொர்க்கமாக நினைப்பீர்கள். இணையரின் தழுவல்களுக்கு இணையாக வேறு எதையும் நினைத்துப் பார்க்க கூட மாட்டீர்கள்.
வசந்த கால நினைவுகள் வசந்த கால நினைவுகள் பலருக்கு வருவதில்லை. ஆனால் அந்த நினைவுகள் உங்களுக்கு மீண்டும் வருகிறதென்றால் நிச்சயம் கடந்த காலத்தில் நீங்கள் காதலித்தது என்பது உண்மைதான். உங்களால் கடந்த காலத்தையும் சேர்த்து நிகழ் காலத்திலும் வாழ முடியும். அதே போல் திரைப்படங்களில் வருவது போல் உங்கள் பங்காளியும் இந்தக் காலத்திலும் வரலாம். போர் மறை புரிந்து உங்கள் காதலியுடன் கரம் சேருங்கள்.

ஒளிவு மறைவு இருக்காது காதல் காமம் தனிப்பட்ட விசயங்கள் என எதையும் பாராமல் பார்த்த ஓரிரு சந்திப்புகளிலே இவையனைத்தையும் பேசித் தீர்த்து விடுவீர்கள். நிகழ்காலத்தில் காதலிப்பவர்கள் கூட உணர்வுகளை பரிமாறிக் கொள்வதற்கு தயக்கப் படுவார்கள் அந்த தயக்கம் உங்களுக்கும் முற்றிலும் இருக்காது.
நேர உணர்வை இழப்பீர்கள்மணிக்கணக்கில்பேசினாலும்நொடிகளைக்கடந்ததைப்போன்ற ஒரு உணர்வைப் பெறுகிறீர்களா? உங்களைச் சுற்றி வேறு எந்த நிகழ்வும் நடக்காததைப் போல் தனியுலகில் வாழ்வீர்கள். அதில் இரவு பகல் குளிர் மழை என எந்தக் காலமும் இல்லை. நீங்கள் இணைந்திருக்கும் தருணங்கள் எல்லாமே வசந்தக் காலம் தான்.