துடி, துடிக்க மனைவியை கொடுமை படுத்திய கணவன்.!

சென்னை வளசரவாக்கம் லட்சுமி நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருக்கின்றார். ஜெராக்ஸ் கடை ஒன்றை சொந்தமாக நடத்தி வரும் ராஜேஷ் மற்றும் அவரது மனைவிக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் ஒருவன் இருக்கின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. ராஜேஷ் தினந்தோறும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வருவார்.

இந்த நிலையில் கடந்த 19ம் தேதியும் மணிமேகலையிடம் அதுபோல வரதட்சணை பணம் கேட்டு தாக்கி அடித்து துன்புறுத்தி இருக்கின்றார்.

ராஜேஷின் கொடுமை தாங்க முடியாமல் அவரது மனைவி மணிமேகலை வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி ராஜேஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தற்போது கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.