தேவையான பொருட்கள்:
வேகவைத்த கொள்ளு – 1 கப்
வேகவைத்த சாதம் – 2 கப் (உதிரியாக)
எண்ணெய் – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
கடுக்காய் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சின்ன வெங்காயம் – 1 கப்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை:
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கிவைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் மிளகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் வெட்டிய சிறிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும், பின் கொள்ளு, சுக்குப் பொடி, கடுக்காய்ப் பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
அதன்பின் வேகவைத்த சாதம் சேர்த்து, கிளறி ஒரு நிமிடம் மூடிவிடவும்.
இறக்கும் போது கொத்தமல்லி தழை தூவவும். சூடாகப் பறிமாறவும்.