பிகில் வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த மோசமான செயல்.!

விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பிகில் படமானது வெற்றியடைய விஜய் ரசிகர்கள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு நடத்தியுள்ளனர். இயக்குனர் அட்லி, நடிகர் விஜயின் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் தான் பிகில்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் இந்த படத்தை தயாரிக்கிறது. தீபாவளி அன்று இந்தப் படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடித்து இருக்கின்றார்.

இந்த படத்தில் மனோபாலா, விவேக், யோகி பாபு, டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை இந்த படத்தின் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் விஜய்யின் பிகில் திரைப்படம் வெற்றியடைய நாகை மாவட்டம் மயிலாடுதுறை விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜய் ரசிகர்கள் விஜய் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்றும் விஜய்யின் பிகில் படம் வெற்றியடைய வேண்டும் என்றும் கோவில் வளாகத்தில் மண் சோறு சாப்பிட்டு நேர்த்திகடனை செலுத்தினர்.