தூத்துக்குடியில் முத்தையாபுரம் அருகே தங்கமணி நகரைச் சேர்ந்த சண்முகராஜ் என்பவருக்கு செல்வ சுந்தரி என்ற மனைவி இருந்துள்ளார். இரண்டு நாட்களாக காய்ச்சல் இருந்த காரணத்தால் நேற்று இரவு நேரத்தில் மாத்திரை வாங்க கடைக்கு சென்றுள்ளார்.
அவர் சந்தன மாரியம்மன் கோவில் அருகே வந்தபோது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்து கத்தியை காட்டி மிரட்டி அவருடைய கழுத்தில் இருந்த தாலி செயினை பறித்து விட்டு தப்பியோடி இருக்கின்றனர்.
இதுகுறித்து முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சுந்தரியின் கணவர் சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இது போலவே சில மாதங்களுக்கு முன்பு 13 பவுன் செயின் மர்ம நபர்களால் இதே இடத்தில் பறிக்கப்பட்டது.
அந்த பகுதி மக்கள் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் ராஜ் பிரபு ஆகியோர் பணி மாற்றம் செய்யப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறுகின்றனர். அவர்கள் பணி மாற்றம் செய்த பின்னர் தான் முக்கிய அதிகாரிகள் நியமிக்கப்பட வில்லை என்ற காரணத்தால் இது போன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது என அந்த மக்கள் ஆவேசத்துடன் தெரிவிக்கின்றனர்.