ரஜினி – சிவா கூட்டணியில் அடுத்ததாக சேர்ந்த பெரும்புள்ளி.!

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரம் மற்றும் உலகளவில் தனெக்கென ரசிகர்களை வைத்துள்ள நடிகர் ரஜினிகாந்த். தற்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வந்தார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்த நிலையில்., இந்த படத்திற்கான டப்பிங் பணியில் விரைவில் தொடங்க உள்ளது. இந்த திரைப்படத்திற்கு பின்னர் ரஜினிகாந்த்., இயக்குனர் சிவாவுடன் நடிக்கவுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குனர் சிவா கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள நிலையில்., இது குறித்த அதிகாரபூர்வ தகவலும் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக வெளியானது.

இதனைத்தொடர்ந்து இந்த படத்திற்கான நடிகர்கள் மற்றும் நடிகைகள் தேர்வானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்., இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கவுள்ளதாகவும்., இந்த விசயத்திற்கு ரஜினிகாந்த சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.