தேவையான பொருட்கள் :
அரிசி நூடுல்ஸ் – 200 கிராம்
எலுமிச்சை பழம் – 3
பச்சை மிளகாய் – 7
கடுகு – 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்
நிலக்கடலை – கால் கப்
பெருங்காயம் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் கப்
கொத்தமல்லித்தழை – 1 கொத்து
எண்ணெய் – ஒரு டேபிள் டீஸ்பூன்
உப்பு 1 – டீஸ்பூன்.
செய்முறை :
எலுமிச்சம்பழ நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
அதில் அரிசி நூடுல்ஸ் போட்டு வெந்ததும் வடிகட்டியில் வடிகட்டவும். பிறகு எலுமிச்சை சாற்றில் உப்பினை கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் சூடானதும், அதில் கடுகு நிலக்கடலை, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
பிறகு நறுக்கிய பச்சைமிளகாய், பெருங்காயம், மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு கிளறி, அதனுடன் அரிசி நூடுல்ஸை சேர்த்து கிளறவும்.
அதன் பிறகு உப்பு போட்ட எலுமிச்சை சாற்றினை அரிசி நூடுல்ஸில் ஊற்றி, அரிசி நூடுல்ஸ் முழுவதும் சாறும், மஞ்சள் வண்ணமும் பரவும்படி நன்கு கிளறி கொள்ளவும்.
இறுதியில் சிறிது கொத்தமல்லித் தழையை தூவவும். சுவையான எலுமிச்சை பழ நூடுல்ஸ் தயார்.